Idhayam Matrimony

சவுதாலாவை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, செப். 13 - ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஜாமீனை நீட்டிக்க மறுத்து கோர்ட் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அரியானா மாநில முன்னாள் முதல்வரும், லோக்தளம் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா 2005 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் நியமன ஊழலில் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 78 வயதாகும் சவுதாலாவுக்கு ஜெயிலில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக டெல்லி ஐகோர்ட் 6 வாரம் பரோல் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சவுதாலாவுக்கு இதய கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. 

வருகிற 17 ம் தேதியுடன் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிவடைகிறது. இதையடுத்து இடைக்கால ஜாமீனை மேலும் நீடிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சவுதாலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஒரு முறை ஜாமீன் நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் ஜாமீனை நீட்டிக்க முடியாது என்று கோர்ட் மறுத்து விட்டது. முன்னதாக மனு விசாரணையின் போது சவுதாலா சார்பில் ஆஜரான வக்கீல் லலித் கூறுகையில், சவுதாலாவுக்கு தொடர்ந்து ரத்த அழுத்தம், டி.பி. உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக தெரிவித்தார். 

இதை கேட்ட நீதிபதிகள் சவுதாலாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க முடியாது. அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். அவர் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். அவருக்கு மீண்டும் பதவி கிடைத்தால் இந்த நோய்களை எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். இப்போது பதவி இல்லாததால் இந்த நோய்கள் பற்றி கவலை கொள்கிறார் என்றார். நீதிபதிகள் மேலும் கூறுகையில், 

டி.பி. எளிதில் குணப்படுத்த கூடியது. இதற்கு சிறையிலேயே போதுமான சிகிச்சை பெற்று கொள்ளலாம். அதன் பிறகு மீண்டும் கோர்ட்டை அணுகலாம். எனவே இப்போது அவரை சிறையில் அடையுங்கள். நாங்கள் ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளை பார்க்கிறோம். முதலில் தூக்கு படுக்கையில் கோர்ட்டுக்கு கொண்டு வருவார்கள். மறுநாள் வீல்சேரில் வருவார். அடுத்த நாள் எட்டு வைத்து லேசாக நடப்பார். 3 வது நாள் ஓடியே போய் விடுவார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்