முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் தாக்குதல்: இந்திய பொறியாளருக்கு 9 மாத சிறை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன், செப்.14 - விமானத்தில் அமெரிக்க பெண் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட இந்தியப் பொறியாளருக்கு 9 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனைக்குப் பிறகு அவரை நாடு கடத்தவும் அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்தியாவை சேர்ந்தவர் பொறியாளர் ஸ்ரீனிவாசா எர்ரமிலி.  இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிகாகோவுக்கு சென்றுகொண்டிருந்தார்.  அந்த விமானத்தில்  63 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் 34-வது திருமண நாளை ரெகொண்டாட லாஸ்வேகாஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்தார்.  

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஸ்ரீனிவாசா திடீரென அந்த பெண்ணை பாலியல் சித்திரவதை செய்தார். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜோன்லெப்கோவ். ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாத சிறைத் தண்டனை யும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார். விடுதலைக்குப் பிறகு அவரை போலீஸார் ஓராண்டு  கண்காணிக்க வேண்டும். அவர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும். பிறகு அவரை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்