முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

ஐதராபாத், செப்.14  - ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. வக்கீல் சுரேந்தர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவுசெய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு  தொடர்பாக அவர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். 

ஓராண்டுக்கும் மேலாக அவர் ஐதராபாத்திலுள்ள சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது 4 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக கடந்த  வாரம் 4-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை முழுமையாக தாக்கல் செய்யப்படாததால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. 4-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஜெகன்மோகன் சார்பாக சி.பி.ஐ.கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் சுரேந்தர் ஆஜராகி, ஜெகன்  சொத்து குவிப்பு வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை அடுத்த வாரம் 16 அல்லது 17-ம் தேதி தாக்கல் செய்யப்படும். எனவே ஜெகனுக்கு உடனடியாக ஜாமீன் தரக்கூடாது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய் அவகாசம் வேண்டும் என்றார். 

இதை ஏற்றுககொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்