முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை: அரசு பரிசீலனை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, செப். 14 - அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது சட்ட விரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சமாக 5 ஆண்டும் தண்டனை அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. லஞ்சத்தை அடியோடு ஒழிக்க ஏராளமான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து லஞ்ச தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள்செய்ய பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்தார். அதனடிப்படையில் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த சட்ட திருத்தம் கடந்த மாதம் பாராளுமன்ற மேல்சபையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சட்ட திருத்தத்தின் படி லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமின்றி, கொடுப்பவர்களையும் தண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முன்வருபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பணம் கொடுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்றமும், மத்திய மந்திரி சபையும் ஒப்புதல் கொடுத்தால் இனி லஞ்சம் கொடுப்பவர்களும் சிக்கி சிறை கம்பியை எண்ண வேண்டியதிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்