முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா ரசாயன குண்டு வீசியது உண்மைதான்: ஐ.நா. தகவல்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

நியூயார்க், செப்.15 - அப்பாவி பொதுமக்கள் மீது சிரியா ரசாயன குண்டு வீசியது உண்மைதான் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் புறநகரான கோடா நகரில் போராடிய மக்கள் மீது அதிபர்  பஷவ் அல் ஆசாத்தின் ராணுவம் ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 1500 பேர் இறந்தனர், இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பதிலடியாக சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ரசாயன குண்டு வீசவில்லை என்று சிரியா மறுத்தது. போராட்டக்காரர்களின் புரட்சிப் படைதான் இந்த தாக்குதலை நடத்தியது என சிரியா தெரிவித்தது. எனவே ரசாயன குண்டு வீசப்பட்டதா என்று ஆராய ஐ.நா. நிபுணர் குழு அனுப்பப்பட்டது.  அது கோடா நகருக்குச் சென்று ஆய்வு நடத்தியது. சிரியா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதையடுத்து சிரியா மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி  வைத்தது. 

இந்த நிலையில் ஐ.நா.சபையின் அறிக்கை தயாரிக்கப்பட்டு அது அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பி.பி.சி.க்கு  அளித்த பேட்டியில்  

சிரியா ராணுவம் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசியது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். இந்த தகவல் ஐ.நா. நிபுணர் குழு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago