முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை மீண்டும் தாக்க அல்கொய்தா திட்டம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப்.15 - அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஜவாகிரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்கா மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. இதில் இரட்டை கோபரங்கள் தகர்க்கப்பட்டன. இதில் 3 ஆயிரம் பேர் இறந்தனர். அதன் 12-வது நினைவு தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த இடத்தில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்ட மறுநாள் அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் அய்மான் -இ- ஜவாகிரி 72 நிமிடம் உரையாற்றினார். அவரது பேச்சு ஜி காதி போரமஸ் ஊடகத்தில் வெளியாகி உள்ளது. அதில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவின் பொருளாதாரத்தை நாம் ஆட்டம் காண செய்து வருகிறோம். அமெரிக்க ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கான கடும்செலவினங்களால்பொருளாதார நிலையில் தேக்கம் ஏற்பட்டு தள்ளாடி வருகிறது.

சோமாலியா, ஏமன், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முகாமிட்டுள்ள  அமெரிக்க படைகளை நாம் தொடர்ந்து தாக்கி வெற்றிபெற்று வருகிறோம். இது அமெரிக்காவுக்கு பதட்டத்தையும், கடும் செலவினத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில்  அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும். அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அவரது உரை அமெரிக்க உளவு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.  இதனால் அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்