முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25 தொகுதிகள் - விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டவட்டம்

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,பிப்.23 - தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில் காங்கிரசுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்த அணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் குழுவினருடன் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதற்காக விடுதல சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், செய்தி தொடர்பாளர் வன்னியரசு, துணை பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோர் தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீடு குழுவிடம் இந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

இதில் 20 தனித் தொகுதிகளும், 5 பொதுத் தொகுதிகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு அலை கிளம்பியதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது என்றும் அதற்கேற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்