முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

காபூல், செப்.15 - ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். காபூலுக்கு மேற்கே உள்ள ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். பின்னர் தூதரகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு சுட்டனர். 

இதுபற்றி ஆப்கன் அதிகாரிகள் கூறும்போது, 2 கார்களில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டு அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்குள் பாதுகாப்புப் படையினர் தாக்கியதால் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். 

இதில் ஆப்கானியர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.  தீவிரவாதிகள் தரப்பில் 7 பேர் இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்