முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டம்: அஜித் சண்டிலாவுக்கும் ஆயுட் கால தடை?

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.15 - 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜி த் சண்டிலா ஆகியோர் சிக்கினர். இவர்களை டெல்லி போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடப்பட்டனர். சூதாட்ட தரகர்களாக செயல்பட்ட முன்னாள் ராஜஸ்தான் அணி வீரர் அமித் சிங் உட்பட 11 பேர் சிக்கினர். 

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அதிகாரி ரவி சவானி விசாரணை நடத்தி அறிக்கையை தாக் கல் செய்தார். 

அந்த அறிக்கையில் வீரர்கள் மீதான குற்றச் சாட்டு உண்மை என குறிப்பிடப்ப ட்டு இருந்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக் கை குழு முன்பு ஆஜராக ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அமித் சிங் , சித்தார்த் திரிவேதி, ஹர்மீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

இவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராயினர். இதில் ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு ஆயுட் கால தடை விதிக்கப்பட்டது. அமித் சிங்கிற்கு 5 ஆண்டு தடையும், சித்தார்த் திரிவேதி க்கு 1 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்படாததால் ஹர்மித் சிங் விடுவிக்கப்பட்டார் ர். அரியானா வைச் சேர்ந்த அஜித் சண்டிலா கடந்த 9 -ம் தேதி தான் ஜெயிலில் இருந்து வெ ளியே வந்தார். இதனால் அவருக்கு சம் மன் அனுப்பப்படவில்லை. 

அவருக்கும், சம்மன் அநுப்பப்ட்டு விசாரிக்கப்படுகிறார். அவருக்கு ஆயுட் கால தடை விதிக்கப்படுகிறது. 

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் அஜித் சண்டிலாவின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அவர் சூதாட்டத் தரகர்களுட ன் பல முறை பேசி பணம் வாங்கியுள்ளார். 

மேலும் வீரர்களை சூதாட்டத்தில் ஈடுப ட வைத்து உள்ளார். இதற்காகவும் அவ ர் பணம் பெற்றுள்ளார். எனவே அவரு க்கும், ஆயுட் கால தடை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்