முக்கிய செய்திகள்

கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது - ஹனுமந்தராவ்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      அரசியல்
HANUMANTHA RAO1

திருப்பதி,மே.11 - கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹனுமந்தராவ் தெரிவித்தார். திருமலை வந்த அவர், பெருமாளை வழிபட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரானது. அதனால்தான் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. மேலும் காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதால் கல்மாடி கைது செய்யப்பட்டார். 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இப்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: