ஜிம்பாப்வேயுடன் தோல்வி: மிஸ்பாவை நீக்க வலியுறுத்துல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

கராச்சி, செப். 17 - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஹராரேயில் நடந்த டெஸ்டில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது. கடைசியாக பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் 1998 ம் ஆண்டு தோற்றது. 15 ஆண்டுக்குப் பிறகு, பலவீனமான ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் தோற்றதால் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். 

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும் டெலிவிசன் வர்ணனையாளருமான ரமீஸ் 

ராஜா கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது - 39 வயதான மிஸ்பாவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. அணியை வழி நடத்தக் கூடிய புதியசவர் தேவை. இதனால் மிஸ்பாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுவே அதற்கு சரியான நேரம். என்னைப் பொறுத்தவரை மிஸ்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதுகிறேன். தெ.ஆ. பயணத்திற்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்றார். 

மற்றோரு முன்னாள் கேப்டனான அமீர் சோகைல் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை உருவாக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறிவிட்டது என்றார். 

முன்னாள் வேகப் பந்து வீரர் சோயிப் அக்தர் கூறும் போது, பயிற்சியாளர் பதவயில் இருந்து வாட்மோரை நீக்க வேண்டும். ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதற்கு பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங்கே காரணம். அணியின் இந்த மோசமான நிலைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே காரணம் என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: