முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கடைசி அணு உலையை மூடும் பணிகள் துவக்கம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

டோக்கியோ, செப்.17 - ஜப்பானில் இயங்கி வரும் கடைசி அணு உலையையும் மூடும் பணிகளை அந்நாட்டு விஞ்ஞானனிகள் தொடங்கியுள்ளனர். இதனால் அணு சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அங்குள்ள புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கிருந்து கதிர்வீச்சு பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அணு மின்சக்திக்கு எதிராக ஜப்பானில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அணு மின் சக்தியை பயன்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரஷியாவின் செர்னோபில் அணு உலையில் கடந்த 1986-ம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற விபத்து ஏற்பட்டு விடுமோ என்று ஜப்பான் மக்கள் அஞ்சுகின்றனர்.

அவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில்  இருந்த 50 அணு உலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மூடப்பட்டன. அந்நாட்டில் இயங்கி வரும் கடைசி அணு உலையாக புகுய் மாகாணத்தில் ஒய் அணு  உலை உள்ளது. இதையும் படிப்படியாக மூடும் பணியை  இந்த அணு உலையை நிர்வகிக்கும் கான்சாய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொடங்கினர்.  இந்தப் பணி முடிவடைந்ததும் அணு மின் உற்பத்தி  முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் அணு மின் சக்தி  இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது. 

முன்னதாக அணு மின் சக்தி  இல்லாமல் போனால் நாடு கடுமையாக மின்வெட்டை சந்திக்கும்  என்று அரசு அதிகாரிகளும்,  அணு உலை நிர்வாகிகளும்  கவலை தெரிவித்துள்ளனர். அணு மின் சக்தியையே பெரிதும் சார்ந்துள்ள நாட்டின் மேற்குப் பகுதி  பெரிதும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாகும்.

நிலக்கரி  சுரங்கம் சரிந்து 27 தொழிலாளர்கள் சாவு 

காபூல், செப்.17 - ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 27 தொழிலாளர்கள் உ.யிரிழந்தனர். இதுகுறித்து மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமது சித்திக் அஸிஸி கூறியதாவது:

ருயிடு அப் மாவட்டத்தில் உள்ள அப்கோரக் நிலக்கரி சுரங்கத்தில் பணி.யாற்றிய 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர் என்றார். மாகாண பாதுகாப்பு  அதிகாரி மொசாடிக்குலலா முசாபரி இதுபற்றி கூறுகையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் மிகவும் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றார்.ஆப்கனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அபாயகரமானவை. பழைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றோட்டத்துக்கு சிறிய இடைவெளியே உள்ளது என்று கூறப்படுகிறது.

ஜப்பானில் கடைசி அணு உலையை மூடும் பணிகள் துவக்கம்

டோக்கியோ, செப்.17 - ஜப்பானில் இயங்கி வரும் கடைசி அணு உலையையும் மூடும் பணிகளை அந்நாட்டு விஞ்ஞானனிகள் தொடங்கியுள்ளனர். இதனால் அணு சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அங்குள்ள புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கிருந்து கதிர்வீச்சு பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அணு மின்சக்திக்கு எதிராக ஜப்பானில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அணு மின் சக்தியை பயன்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரஷியாவின் செர்னோபில் அணு உலையில் கடந்த 1986-ம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற விபத்து ஏற்பட்டு விடுமோ என்று ஜப்பான் மக்கள் அஞ்சுகின்றனர்.

அவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில்  இருந்த 50 அணு உலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மூடப்பட்டன. அந்நாட்டில் இயங்கி வரும் கடைசி அணு உலையாக புகுய் மாகாணத்தில் ஒய் அணு  உலை உள்ளது. இதையும் படிப்படியாக மூடும் பணியை  இந்த அணு உலையை நிர்வகிக்கும் கான்சாய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொடங்கினர்.  இந்தப் பணி முடிவடைந்ததும் அணு மின் உற்பத்தி  முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் அணு மின் சக்தி  இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது. 

முன்னதாக அணு மின் சக்தி  இல்லாமல் போனால் நாடு கடுமையாக மின்வெட்டை சந்திக்கும்  என்று அரசு அதிகாரிகளும்,  அணு உலை நிர்வாகிகளும்  கவலை தெரிவித்துள்ளனர். அணு மின் சக்தியையே பெரிதும் சார்ந்துள்ள நாட்டின் மேற்குப் பகுதி  பெரிதும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாகும்.

                      16ராம்1ஏ

நிலக்கரி  சுரங்கம் சரிந்து 27 தொழிலாளர்கள் சாவு 

காபூல், செப்.17

ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபற்றி மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமது சித்திக் அஸிஸி கூறியதாவது:

ருயிடு அப் மாவட்டத்தில் உள்ள அப்கோரக் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய 27 சுரங்கத் தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். சுரங்கத்தின் ஒரு பகுதி  அவர்கள் மீது விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர் என்றார். 

மாகாண பாதுகாப்பு துணை அதிகாரி மொசாடிக்குல்லா முசாபரி கூறுகையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றார்.

ஆப்கனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அபாயகரமானவை. பழைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றோட்டததுக்கு சிறிய இடைவெளியே உள்ளது என்று கூறப்படுகிறது.

நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவு தருவார்: ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை

புதுடெல்லி, செப்.17  - பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவளிப்பார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்தது. இதில் அதிருப்தி அடைந்த அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அவரை சமரசம் செய்யும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்துப் பேசினார்கள். ஜஸ்வ்ந்த்சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்து வெற்றிகரமான முடிவை கட்சி எடுத்துள்ளது. மோடிக்கு, அத்வானியின் ஆதரவு கிடைக்கும். அத்வானி எழுதிய கடிதம் குறித்து கருத்து தெரிவிக்கும் தகுதி எனக்குக் கிடையாது என்றார்.

இதற்கிடையில் அத்வானி யின் கடிதம் குறித்து மும்பையில் கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், கட்சியில் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட அத்வானிக்கு உரிமை உள்ளது என்றார். சுஸ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, ஆனந்த்குமார், ரவிசங்கர் பிரசாத், பல்வீர் புஞ்ச் ஆகியோர் சனிக்கிழமை அத்வானியை சந்தித்துப் பேசினர். 

பின்னர் சுஸ்மா ஸ்வராஜ் கூறுகையில், கட்சியில் யாகுக்கும் அதிருப்தி இல்லை. பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட உடன் அவர் அத்வானியை சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றார். 

நரேந்கிரமோடி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்க அத்வானிக்கு ஜனநாயக முறையில் அனைத்து உரிமைகளும் உள்ளன  என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் வைத்யா கூறினார்.                        

ராஜீவ் காந்தி கொலை விசாரணையில் குறைபாடு: முக்கிய சாட்சி குற்றச்சாட்டு

புதுடெல்லி, செப்.17 - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக அந்த வழக்கு தொடர்பான முக்கி.ய சாட்சி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.  ராஜீவ் படுகொலையில் சதிச் செயல்கள்  குறித்து விசாரித்த ஜெயின் குழுவிடம் முக்கிய சாட்சி அளித்தவர் வழக்கறிஞர் ரமேஷ் தலால். 

இவர் பிரதமருக்கு எழுகியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஜெயின் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்துவதற்காக 1988-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சி.பி.ஐ.  ஐ.பி. ரா உளவு நிறுவனம் அமலாக்க இயக்குநரகம் ஆகியவை அடங்கிய எம்.டி.எம்.ஏ. அமைப்பு மூன்று மாதங்களுக்குள் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார்.

சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு ரமேஷ் தலால் எழுகியுள்ள மற்றொரு கடிதத்தில் ராஜீவ் 

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனிடமும், தற்போது இலங்கையில் உள்ள குமரன் பத்மநாதனை இந்தியா கொண்டுவந்து  அவரிடம் சர்ச்சைக்குரிய சந்திராசாமி பற்றி அவர்கள் தெரிவித்தவைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.     

தங்கம் இருப்பு பற்றி  ரிசர்வ் வங்கி விவரம் கேட்பு: குருவாயூர் கோவில் தேவஸ்வம் நிராகரிப்பு

திருச்சூர், செப்.17 - குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலின் தங்க நகை  இருப்பு பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை          குருவாயூர் கோவில் தேவஸ்வம் நிராகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் உள்ள தங்கம் இருபபு பற்றி விவரம் சேகரிக்க  ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி கேரளத்தில் உள்ள இந்துக் கோயில்களில் உள்ள தங்கம் இருப்பு பற்றிய விவரங்களை அறிவிக்குமாறு கோவில்களுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. இதுபோன்று தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதாக கிருஷ்ணன் கோவில் நிர்வாகமும், தென்கேரளப் பகுதியில் முக்கியமான கோயில்களை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானமும்தெரிவித்துள்ளன. 

இந்த விவகாரம் தொடர்பாக குருவாயூர் தேவசம் நிர்வாகி முரளிதரன் கூறியதாவது:

இந்த கோயிலில் உள்ள தங்கம் இருப்பு பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியுள்ளது. கோவில் நிர்வாகக்குழு மாற்றி அமைக்கப்பட உள்ளதால் உடனடியாக பதிலளிப்பது சாத்தியமற்றது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இதுபற்றி கோவில் தேவஸ்வம் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  தங்கம் இருப்பு பற்றி சரியாக அளவிடுவது கடினம் என்பதால் அதுகுறித்த விவரங்களை வழங்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டோம் என்றார். 

தேவஸ்வம் நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் 2 மாதங்களுக்கு முன்பே முடிந்து  விட்டது. இப்போது தேவசம் ஆணையர் கோபாலமேனன் நிர்வாகி உள்ளிட்ட நிரந்தர உறுப்பினர்கள் மற்றும்  

தற்காலிக குழுவே நிர்வகித்து வருகிறது.  

ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவாலா, கோவில்கலில் தங்கம் இருப்பு பற்றி பதில் தருமாறு கடிதம் எழுதிஉள்ளதாகவும், தங்கத்தின் இருப்பு பற்றி தெரிந்து கொள்ளவே கடிதம் எழுகி உள்ளதாகவும், இதில் சூழ்ச்சி எதுவும் இல்லை என்றும், தங்கத்தை வாங்கும் திட்டம்  எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். .                                     

பெரியார் சிலைக்கு  மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ  அறிக்கை 

 மதுரை, செப்.17  - பெரியார் சிலைக்கு  மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க பெரியாரின் 135-வது பிறந்த நாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. மதுரை அவுட்போஸ்டில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் புதூர் துரைப் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து  மரியாதை செய்யப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர் மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு  உறுப்பினர்கள், பகுதி, தொகுதி வட்டக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்,  உள்ளாட்சி  பிரதிநிதிகள் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்