முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்கம் சரிந்து 27 தொழிலாளர்கள் சாவு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

காபூல், செப்.17-ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபற்றி மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமது சித்திக் அஸிஸி கூறியதாவது:

ருயிடு அப் மாவட்டத்தில் உள்ள அப்கோரக் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய 27 சுரங்கத் தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். சுரங்கத்தின் ஒரு பகுதி  அவர்கள் மீது விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர் என்றார். 

மாகாண பாதுகாப்பு துணை அதிகாரி மொசாடிக்குல்லா முசாபரி கூறுகையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றார்.

ஆப்கனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அபாயகரமானவை. பழைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றோட்டததுக்கு சிறிய இடைவெளியே உள்ளது என்று கூறப்படுகிறது.

 

நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவு தருவார்: ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை

புதுடெல்லி, செப்.17  - பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவளிப்பார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்தது. இதில் அதிருப்தி அடைந்த அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அவரை சமரசம் செய்யும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்துப் பேசினார்கள். ஜஸ்வ்ந்த்சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்து வெற்றிகரமான முடிவை கட்சி எடுத்துள்ளது. மோடிக்கு, அத்வானியின் ஆதரவு கிடைக்கும். அத்வானி எழுதிய கடிதம் குறித்து கருத்து தெரிவிக்கும் தகுதி எனக்குக் கிடையாது என்றார்.

இதற்கிடையில் அத்வானி யின் கடிதம் குறித்து மும்பையில் கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், கட்சியில் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட அத்வானிக்கு உரிமை உள்ளது என்றார். சுஸ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, ஆனந்த்குமார், ரவிசங்கர் பிரசாத், பல்வீர் புஞ்ச் ஆகியோர் சனிக்கிழமை அத்வானியை சந்தித்துப் பேசினர். 

பின்னர் சுஸ்மா ஸ்வராஜ் கூறுகையில், கட்சியில் யாகுக்கும் அதிருப்தி இல்லை. பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட உடன் அவர் அத்வானியை சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றார். 

நரேந்கிரமோடி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்க அத்வானிக்கு ஜனநாயக முறையில் அனைத்து உரிமைகளும் உள்ளன  என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் வைத்யா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்