முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் 11 பயங்கரவாதிகள் கைது

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

யோலோ,செப்.18 - நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் 11 போகோஹராம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். நைஜீரியாவில் உள்ள அடமவா மாகாணம் மிஷிகா நகரத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த போகோ ஹராம் பயங்கரவாதிகளை பிடிக்க அதிரடிப்படை போலீசார் த்ஈவஅஇ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பயங்கரவாதிக்ள் 6 பேர் மைடுகுரி பகுதியிலும், 5 பேர் முபி பகுதியிலும் கைது செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரி பெயிடி மார்ட்டின்ஸ் தெரிவித்தார். முபி பகுதியில் பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.  

போகோ ஹராம் பய்ங்கரவாதிகளை பிடிக்க அப்பகுதி மக்கள் கண்காணிப்புபடை ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்