முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அழகியாக இந்திய பெண் தேர்வு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

நியூயார்க், செப். 18 - அமெரிக்க அழகி பட்டத்தை முதன் முறையாக வென்று இந்திய இளம் பெண் சாதனை படைத்துள்ளார். 

2014 ம் ஆண்டிற்கான அமெரிக்க அழகி போட்டி நியூஜெர்சசி மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த 13 பெண்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நீனா தாவுலூரி மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மிஸ் அமெரிக்க அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

விழாவில் நீலா தாவுலூரியின் இந்திய பாரம்பரிய நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மிஸ் அமெரிக்க பட்டம் சூடிய நீனா செய்தியாளர்களிடம் எனது தந்தை மருத்துவராக உள்ளார். நானும் மருத்துவராகத்தான் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்