முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. பதுக்கி வைத்திருந்த மான் தோல் பறிமுதல்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,மே.12 - ராஜபாளையம் வனப்பகுதியில் தனியார் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சிறுத்தை மற்றும் புள்ளி மான்களின் தோல்களை வனத்துறையினர் கைப்பற்றி முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லி வனத்துறை ரேஞ்சர் பழனிராஜ் ஆலோசனைப்படி வனப்பகுதி வேட்டை தடுப்பு காவல் படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ராஜபாளையம் முடங்கியா பிரிவு அம்மன் கோவில் பீட் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜபாளையம் சந்திரன் என்பவரது தோப்பிற்குள் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறுத்தை மற்றும் 2 மான்களின் தோல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தோப்பில் பணிபுரியும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த குப்புசாமியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தோப்பு அதிபர் சந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony