சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீ விபத்து

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப் 20 - மின்கசிவு காரணமாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஒட்டினார் போல் மூன்று மாடிகள் கொண்ட கட்டிடம் உள்ளது.

முதல் மாடியில் செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் அலுவலக அறைகள் உள்ளன. இரண்டாவது மாடியில், போட்டிகள் நடக்கும் போது செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் அமரும் பகுதி உள்ளது. மூன்றாவது மாடியில் விஐபிகள் அமர்ந்து போட்டியை காணும் பகுதி உள்ளது.

மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள இணைச் செயலாளர் அலுவலகத்தில் குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர் ஒருவர், திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து என்ற போதிலும்  அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: