தோனி சிறந்த கேப்டன்: மே.இ.தீவு வீரர் ராம்தின்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி. செப். 20 - சாம்பியன்ஸ் லீக் டி -20  கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்று டிரினிடாட்  டுபாக்கோ. மே.இ.தீவைச் சேர்ந்த அந்த அணிக்கு விக்கெட் கீப்பர் ராம்தின் கேப்டனாக உள்ளார். சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது - 

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாட இங்கு வந்துள்ளோம். எங்கள் அணியில் சிறந்த தொடக்க வீரர்கள் , சுழற் பந்து மற்றும் வேகப் பந்து வீரர்கள் உள்ளனர். இதனால் இந்தப் போட்டியில் எங்கள் அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறோம். இந்தத் தொடருக்கு சாம்பியன்ஸ் லீக் போட்டி உதவியாக இருக்கும். மே.இ.தீவு அணி மீண்டும் சிறந்த நிலையை அடைய இந்தியா , தென் ஆப்பிரிக்கா, போன்ற மிகப் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது உதவியாக இருக்கும். டெஸ்ட் தரவரிசையில் நாங்கள் தற்போது 5-வது இடத்தில் உள்ளோம். இது சில சமயம் மாறலாம். எதுவும் நடக்க வாய்ப்புள்ளது. இந்திய அணியில் கேப்டன் தோனி அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் சிறந்த கேப்டன் ஆவார். கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட்கீப்பர் ஆகிய 3 பணிகளிலும் நன்றாக செயல்படும் சிறந்த தலைவராவார். இந்த மூன்றையும் சிறப்பாக செய்வது கடினம். ஆனால் தோனி மூன்றிலும் நன்றாக செயல்படுகிறார். உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐ.பி.எல். சாம்பியன் லீக் ஆகிய கோப்பைகளை வென்று அவர் சிறந்த கேப்டனானார் என்று ராம்தின் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: