முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் ஒருபோதும் ஆயுதம் தயாரிக்காது: அதிபர் ஹசன்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப். 21 - ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹசன் ரெஹானி தங்கள் நாடு ஒருபோதும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடாது என்று உறுதியளித்துள்ளார். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்வதற்கு முன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்கள் உட்பட எந்த விதமான பேரழிவு ஆயுதங்களையும் நாங்கள் தயாரிக்க மாட்டோம். அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இதற்கு முன்பும் நாங்கள் ஈடுபட்டதில்லை. இனிமேலும் ஈடுபடப் போவதில்லை. அணு சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் நோக்கில்தான் யுரேனியத்தை செறிவூட்டும் முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அதை காரணம் காட்டி அமெரிக்காவும், பிற நாடுகளும் விதித்துள்ள பொருளாதார தடையால் ஈரான் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் சக் ஹேகல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், ஈரான் அதிபர் கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஒபாமா எப்போதும் தயாராக உள்ளார். இருந்தாலும் ஈரான் தனது வார்த்தைகளை எந்தளவுக்கு காப்பாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஈரானுடனான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த வாய்ப்பை ஈரான் பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன். புதிய அதிபர் ஹசன் இது வரை பார்த்திராத வகையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் சமாதானத்தை விரும்புவதாக தென்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்