முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகுஷிமா அணு உலையில் 5.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,செப்.21 - ஜப்பானில் 5.3 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. பீதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருசேதங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை. ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட புகுஷிமா அணுமின் நிலைய பகுதிகளிலும் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. அணுமின் நிலைய்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ விஜயம் செய்தார். அவர் வந்து சென்ற சில மஅணி நேரங்களில் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் க்ஊறுகையில் ரஜப்பானில் 5.3 முதல் 5.8 ரிக்டர் அள்வில் நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பசிபிக் கடஅற்பகுதியில் இவாகி என்ற இடத்திலிருந்து 20 கி.மீ. தொலவில் பூமிக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் மற்றும் 50 கி.மீ. தூரத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அணு உலையில் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்