முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை மல்யுத்தம்: இந்திய ஆடவர் அணி தகுதி

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, செப். 22 - உலகக் கோப்பை மல்யுத்தப் போட்டியில் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்களை வென்றதுடன் முதல் முறையாக உலக கோப்பைக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை மல்யுத்த போட்டியில் இந்திய ஆடவர் அணி ப்ரீ ஸ்டைல் பிரிவில் பங்கேற்கும். 

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியின் ஆடவர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் அமீத்குமார் வெள்ளி பதக்கமும், பஜ்ரங் வெண்கல பதக்கமும் வென்றனர். அமித் குமார் 9 புள்ளிகளும், பஜ்ரங் 8 புள்ளிகளும் பெற்றனர். மேலும் 74 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான இறுதி சுற்று வரை நர்சிங் முன்னேறினார். ஆனால் இறுதி சுற்றில் அவர் தோல்வியடைந்தார். எனினும் இதனால் இந்தியாவுக்கு  6 புள்ளிகள் கிடைத்தது. ஆகவை ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்திய அணி 23 புள்ளிகளை பெற்றது. 

இதனால் ஈரான், ரஷ்யா, ஜார்ஜியா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 6 வது இடத்தை பிடித்துள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை மல்யுத்த போட்டிக்கு தகுதி பெறும். அதனால் முதல் முறையாக இந்திய ஆடவர் அணி உலக கோப்பை மல்யுத்தத்துக்கு தகுதி பெற்றது. உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தற்போது பெற்ற 6 வது இடமே சிறந்த இடமாக உள்ளது. இதற்கு முன் 2009 ம் ஆண்டில் 10 வது இடத்தையும், 2010 ம் ஆண்டில் 13 வது இடத்தையும், 2011 ம் ஆண்டில் 31 வது இடத்தையும் இந்திய அணி பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2012 ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றதால் ஆடவர் பிரிவிலான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவில்லை. 

ஆனால் ஒலிம்பிக்கு பிறகு மகளிர் பிரிவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் மங்கோலியாவில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை மல்யுத்த போட்டிக்கு முதன் முறையாக இந்திய அணி தகுதி பெற்றிருந்தது. 8 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago