முக்கிய செய்திகள்

அமர்சிங் தொலைபேசி உரையை வெளியிட தடை நீக்கம்

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
amar-singh1

 

புதுடெல்லி,மே.12 சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங்கின் தொலைபேசி உரையாடல்களை வெளியிட இருந்த தடையை சுப்ரீம்கோர்ட்டு நேற்று நீக்கியது. இதனையொட்டி அவரின் தொலைபேசி உரையாடலை போலீசார் வெளியிடலாம் என்று தெரிகிறது. 

சமாஜ்வாடி கட்சியில் முக்கிய தலைவராக இருந்த அமர்சிங், முலாயாம் சிங் யாதவுடன் ஏற்பட்ட மோதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் அமர்சிங் தொலைபேசி உரையை போலீசார் பதிவு செய்தனர். இது தனிமனிதன் உரிமையை மீறிய செயல் அதை வெளியிடக்கூடாது என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் அமர்சிங் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனையொட்டி அவரது உரையை போலீசார் வெளியிட முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான பெஞ்ச் விதித்திருந்தது.  இதற்கிடையில் இந்த ரிட்மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்சிங் தொலைபேசி உரையை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு வெளியிடலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். இந்த தொலைபேசி உரையில் அமர்சிங்கின் அரசியல் மற்றும் இதர ரகசிய நடவடிக்கைகள் குறித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சியை அமர்சிங் கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தார். பின்னர் தனது கருத்தை அமர்சிங் மாற்றிக்கொண்டு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: