முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நீதிபதியாகிறார் இந்தியர்: அதிபர் பரிந்துரை

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப். 22 - சிகாகோவில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியரான வழக்கறிஞர் மணீஷ் எஸ். ஷா இல்லினாய்ஸ் மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உட்பட புதிய அமர்வு நீதிபதிகளின் பெயர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். 

இது குறித்து ஒபாமா கூறுகையில், நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்கள் சட்டப் பணிகளில் புகழ் பெறுவார்கள். நான் பெருமையுடன் அவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் அமெரிக்க மக்களுக்காக ஒருமைப்பாட்டுடன் சலனமற்ற அர்ப்பணிப்புடன் நீதி சேவை ஆற்ற வேண்டும் என்பதே என்றார். செனெட்டர் மார்க் கிரிக் கூறுகையில், மணீஷ் ஷா அதிக அனுபவம் மிக்கவர். அவர் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு நீதிமன்ற விவகாரத்தில் தெளிவு கிடைக்க மிகுந்த உதவியாக இருக்கும். 

செனட்டர் டர்பின் கூறுகையில், ஒபாமா பரிந்துரை செய்துள்ள மணீஷ் ஷாவுக்கு எனது ஆதரவும் செனட் சபையின் முழு ஆதரவும் உண்டு என்றார். இந்தியாவை சேர்ந்த ஷாவின் பெற்றோர் நியூயார்க் மாகாணம் மேற்கு ஹார்ட்போர்ட்டில் குடியேறிவர்களாவர். அங்கு ஷாவும் அவரது சகோதரரும் பிறந்தனர். ஷாவின் மனைவி ஜோன்ஸா கிரிசிங்கர் பல்கலைக் கழக பேராசிரியை தற்போது ஷா தம்பதியினர் சிகாகோவில் வசிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்