முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் நீதிபதிகள் மும்பையில் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

அட்டாரி, செப். 23 - மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிபதிகள் குழு இந்தியா வந்துள்ளது. 

மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு இந்தியாவிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஹேமந்த் கட்காரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது கமாண்டோ படையினர் நடத்திய ஆபரேசனில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்பவனை மட்டும் உயிருடன் பிடித்தனர். பின்னர் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாகவும் அவர்களை ஒப்படைக்கும்படியும் இந்தியா ஆதாரங்களை கொடுத்தது. ஆனால் மும்பை சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்தது. அதற்கு இந்திய அரசும் சம்மதித்தது. இது குறித்து பாகிஸ்தான் அரசு தரப்பு வக்கீல் சவுத்ரி கூறியதாவது, 

செப்டம்பர் 11 ம் தேதி பாகிஸ்தான் நீதிபதிகள் இந்தியா வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டதால் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 7 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் மும்பை தாக்குதல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வர். மேலும் சாட்சிகளிடமும் குறுக்கு விசாரணை நடத்துவார்கள். மேலும் கசாப்பின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் பார்வையிடுவார்கள். இவ்வாறு சவுத்ரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்