முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆய்வு

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு,மே.12 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து உயர்மட்ட கூட்டத்தில் மத்திய ராணுவ இணை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். கோடை காலம் வந்துவிட்டாலே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புவதில் பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஈடுபட்டுவிடும். தற்போது ஆயுத பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்  ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ தயாராக இருப்பதையொட்டி பாகிஸ்தானையொட்டி இந்திய எல்லை நெடுகிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய ராணுவ அமைச்சர் பல்லம் ராஜூ நேற்று உதம்பூரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஏற்பாட்டின்படி அமைச்சர் பல்லம் ராஜூ தலைமையில் உயர்ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது தற்போது மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. பாகிஸ்தானையொட்டியுள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் ஊடுருவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.என். ஆச்சார்யா தெரிவித்தார். ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதும் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். 

முன்னதாக கூட்டத்திற்கு வந்த அமைச்சர் பல்லம் ராஜூவை ராணுவ உயர் அதிகாரிகள் கே.டி.பர்நாயக், ஜாஸ்பீர் சிங், சஞ்சய் குல்கர்னி ஆகியோர் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்