முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிந்துநதி ஆணையக்குழு இந்தியா வருகை

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.23 - செனாப் நதியில் தொடங்க உள்ள மின் உற்பத்தி திட்டம் குறித்து ஆலோசிக்க பாகிஸ்தானின் சிந்துநதி ஆணையக் குழு இந்தியா வந்தது. இதுபற்றி சிந்துநதி ஆணையக்குழுவுக்குத் தலைமை வகிக்கும் மிஸ்ரா ஆசீப் கூறியதாவது:

செனாப் நதியில் மின் உற்பத்திக்காக புதிதாக 4 திட்டங்களை இந்தியா தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2000 மெகாவாட் மற்றும் சிறு அணைகள் மூலம் 850 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்ய உள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதியில் செனாப் நதி அமைந்துள்ளதால் நீர் மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்றார் ஆசீப்.

   சில ஆண்டுகளாக நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்தியா கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

      

   

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்