முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் வேளாண்மை துறை அமைச்சர் மீது ஊழல் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப். 23 - முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்கின் மீதான குற்றச்சாட்டை அடுத்து தற்போது காஷ்மீரில் மற்றொரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மோடியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட வி.கே. சிங் மீது காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ நிதியை தவறாக கையாண்டது மற்றும் காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என பா.ஜ.க தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் காஷ்மீர் வேளாண்மை துறை அமைச்சர் குலாம்ஹசன் மிர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. ராணுவ நிதியை மாநில அரசு திட்டங்களுக்கு இவர் பயன்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதவியை பயன்படுத்தி உறவினர் சிலருக்கு உயர் பதவிகளை இவர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இவரது மகன் அப்ரோஸ் மிர்ருக்கு செயலாளர் தகுதியிலான பதவியை பெற்றதாக கூறப்படுகிறது. 

அப்ரோஸ் மிர் தொழிலாளர் துறை தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து உமர் அப்துல்லா அரசு விளக்கமளிக்க வேண்டும் என காஷ்மீர் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அப்ரோஸ் மிர்ரை காதித் துறை செயலாளராக நியமித்து உமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் காஷ்மீர் அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago