முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநாத் மெய்யப்பன் உட்பட 22 பேர் மீது குற்றப்பத்திரிகை

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, செப். 23 - ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட மோசடி வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் உட்பட 22 பேர் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட மோசடி நடைபெற்றதாக 4 மாதங்களுக்கு முன்பு மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், நடிகர் தாராசிங்கின் மகனான விண்டு தாராசிங் உள்ளிட்டோர் கைதாகினர். குருநாத் மெய்யப்பன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகன் ஆவார். 

ஐ.பி.எல் மோசடி விவகாரம் வெளிவந்ததை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக சீனிவாசன் பதவி விலகினார். இந்த நிலையில் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்ட 22 பேர் மீது மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் உதய் பட்லாட் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றப் பத்திரிகை மொத்தம் 11,609 பக்கங்களை கொண்டதாக உள்ளது. இதில் குருநாத் மெய்யப்பன், விண்டு தாராசிங் ஆகியோர் மீது சூதாட்ட பிரிவுகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்பாட் பிக்சிங் பிரிவில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

மும்பையை சேர்ந்த சூதாட்ட தரகர்கள் ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ், பாண்டுரங்க கடம் ஆகியோரை கடந்த மே மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 92 செல்போன்கள், 18 சிம்கார்டுகள், ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரித்த போது இந்தியா, பாகிஸ்தான், துபாய் நாடுகளில் உள்ள சூதாட்ட தரகர்களுக்கு சூதாட்டம் தொடர்பாக ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ் ஆகியோர் தகவல் கொடுத்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சூதாட்டத்தில் விண்டுவின் பெயர் வெளியானது. 

அவருக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் அறிவித்து கைது செய்தனர். இந்த வழக்கில் விண்டுவுக்கு அணி வியூகம் உள்ளிட்ட தகவல்களை குருநாத் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனக்கும் குருநாத் மெய்யப்பனுக்கும் சம்பந்தமில்லை என்று பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் கூறினார். இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 

குருநாத் மெய்யப்பன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் சட்டம் தன் கடமையை செய்யும். அவருக்கு எனக்கும் தொடர்பும் இல்லை. அடுத்த வாரம் நடைபெறவுள்ள பி.சி.சி.ஐ. ஆண்டு பொதுக்கூட்டத்தில்தான் தலைவராக பங்கேற்பேன். 

குருநாத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ரேண்டிய அவசியமில்லை என்றார் அவர். நான் ஒரு அப்பாவி. எனக்கும், சூதாட்ட தரகர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரெளப் கராச்சியில் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago