முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசி-ரெய்னா அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஞ்சி, செப்.24 - சாம்பியன்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டைட்டன்ஸ்அணியை வென்றது. ராஞ்தியிலுள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் ஆடிய டைட்டன்ஸ் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.  பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றிகண்டது. 

முன்னதாக டாஸை வென்ற சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டைட்டன்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார்.  ஆட்டக்காரர்களாக டேவிட்ஸூம், ருடால்பும், களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துத் தந்தனர். அணியின் ஸ்கோர் 46 ஆக இருந்தபோது, ருடால்ப் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். இதைத்தொடர்ந்து டேவிட்ஸூடன் டி.வில்லியர்ஸ் இணைந்தார். இருவரும் பவும்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்தபோது, டேவிட்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.  இதைத் தொடர்ந்து வில்லியர்ஸூடன், பெஹார்டியந் ஜோடி சேர்ந்தார். பெஹார்டியன் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினார்.  அவர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த வீஸ் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.                        

இறுதியில் ஜடேஜா பந்து வீச்சில் பிராவோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளு அடங்கும். இறுதியில் வார்டெர்மெர்வ் ஒரு ரன்னும், மோசல் 4 ரன்களும், எடுத்து களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, அஸ்விந் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. மேக் ஹசியும், முரளி விஜயும் களமிறங்கினர். முதல் ஓவிரிலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார் டைட்டன்ஸ் அணி வீரர் வான்டெர் மெர்வ். முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் விஜய். 

பின்னர் ஹசியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இவர்களது அதிரடியால் ஸ்கோர் உயர்ந்தது. பின்னர் ஹசியுடன் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். பின்னர் பத்திரி நாத்துடன் ஜோடி சேர்நத பிராவோ 38 ரன்கல் சேர்த்து  அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். ரிச்சர்ட்ஸ் பந்தில் பிராவோ ஆட்டமிழந்தார். பின்நர் கேப்டன் தோனி ஒரு சிக்ஸரை விளாசினாலும், உடனடியாக ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மோர்கெல் பத்ரிநாத்துடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பக்ரிநாத் 20 ரன்களும், மோர்கெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ரெய்னா சேர்வு செய்யப்பட்டார். டைட்டன்ஸ் தரப்பில் ரிச்ர்ட்ஸ் 3 விக்கெட்டுகளும் வான்டெர் மெர்வ் , மார்ன்மோர்க்கெல், வீஸ் ஆகியோர் தலைஆ ஒரு விக்கெட் சாய்த்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்