முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தேவாலயத்தில் தாக்குதல்: 80 பேர் பலி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், செப்.24 - பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுதாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர். 200 பேர் பலத்தக் காயமடைந்தனர்.  பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பாகிஸ்தான் சர்ச் என்று அழைக்கப்படும் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்கள் மீது2 பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதுபற்றி பெஷாவர் நகர் ஆணையர் சாகிப்ஜதா முகமது அனீஸ் கூறும்போது, தேவாலயத்திலிருந்து பிரார்த்தனை முடிந்து அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார். 

தாக்குதல் நடந்தபோது தேவாலயத்தில் 700 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தால் தேவாலயத்தின்பக்கத்தில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தன. இதில் 4 குழந்தைகளும் இறந்தனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கெரிவித்தார். பயங்கர வாதிகள் முதலில் பட்டாசுகளை கொளுத்திப் போட்டதாகவும், பின்னர் குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் நேரில் பார்த்த ஒருவர்தெரிவித்தார். 

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்தான் இந்த்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

                

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago