முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 24 - இந்திய கடலோர காவல் படையினரின் விஷ்வாஸ்ட் கப்பல் கடந்த 20-ந் தேதி இந்திய கடல் எல்லையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. 

அன்று மதியம் 1.30 மணியளவில், சென்னைக்கு வட கிழக்கே 163 கடல் மைல் தூரத்தில் 2 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் 12 பேரையும் மற்றும் 2 படகுகளையும் தகுந்த பாதுகாப்புடன் காக்கிநாடாவுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் காலை 11 மணி அளவில் காக்கிநாடா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்திய கிழக்கு கடல் பகுதிகளில், இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 32 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் 6 மீன்பிடி படகுகள் மற்றும் ஆயிரத்து 905 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவல்கள் இந்திய கடலோர காவல் படையினரின் கிழக்குப் பகுதி மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்