முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெண்டுல்கர் ஓய்வு குறித்து பேச வேண்டாம்: வாரியம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை,செப்.25 - கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழாக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி  வருகிறார்.  இவர் தனது 200-வது டைஸ்டை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நவம்பர் மாதம் விளையாட உள்ளார். இப்போட்டியுடன் அவர் ஓய்வு பெற்று விடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு குழு தலைவர் சந்த்ஈப்பட்டேல் தெண்டுகல்கரை சந்தித்து அவரது எதிர்காலம் பற்றி பேசியதாக தகவல் தெரிந்தது. இதை சந்தீப் பட்டேல் ம்றுத்துள்ளார். இந்த நிலையில் தெண்டுல்கரின் ஓய்வு பற்றி பேச வேண்டாம் எந கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து விளையாட்டு மேம்பாட்டு அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறியதாவது, 

தெண்டுல்கரிடம் 10 மாதங்களாக பேசவில்லைஎதன தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார். மீடியாக்களில் வரும் யூகங்களுக்கு தேர்வாளர் தங்களது விளக்கத்தை அளிப்பது முக்கியமானது இல்லை. தெண்டுல்கர் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவரது ஓய்வை பற்றி அவரை தவிர யாரும் பேசுவது நன்றாக இருப்பதாகாது. 2007-ஆண்டில் இருந்தே அவ்ரது ஓய்வை பற்றிய விவாதம் தொடங்கிவிட்டது. அவரது ஓய்வை  பற்றி யாரும் பேசவேண்டாமே. இந்த நேரம் வரை அவரால் இந்திய கிரிக்கெட்டுக்காக தனது  சேவையை செய்ய முடியும். இதை நினைத்து எல்லோரும் மகிழலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்