முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவை நிறைவேற்றா விட்டால் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.25 -  லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, சட்ட அமைச்சர் கபில்சிபல் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் அதை செயல்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கைய வற்புறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரை.ற்ற உண்ணாவிரதம் இருந்தேன். பிரதமரின் உறுதிமொழியை ஏற்று 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  எனவே பாராளுமன்ற  சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்ற இரு அவைகளிலும், இந்த மசோதா பற்றி விவாதிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் நடைமுறைபடுத்தப்படும் வகையில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். 

மத்திய அரசு இந்த மாசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் பிரதமர் எனக்கு அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். ஊழலை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக இந்த மசோதாவை சிறப்புக் கூட்டத்தில்  நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் நான் டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அந்த கடிதத்திதல் அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்