முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் வெளியில் வந்தார்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத், செப். 25 - சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவவ் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 16 மாத சிறைவாசத்திற்கு பின்பு நேற்று அவர் வெளியில் வந்தார். அவரை தொண்டர்கள் திரளாக கூடி வரவேற்பு அளித்தனர். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு மே மாதம் 27 ம் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இந்த நிலையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜெகனுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி துர்கா பிரசாதராவ் உத்தரவிட்டார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony