முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் 29 ம் தேதி மன்மோகன் - நவாஸ் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

அமெரிக்காவில் வரும் 29 ம் தேதி பிரதமர் மன்மோகன் - நவாஸ் சந்திப்பு

நியூயார்க், செப். 25 - இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் வரும் 29 ம் தேதி அமெரிக்காவில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். 

பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதத்தில் இந்திய எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க நவாஸ் ஷெரீப் முன்வந்தார். இதற்காக பாகிஸ்தான் தூதரை டெல்லிக்கு அனுப்பி சமரச முயற்சி மேற்கொண்டார். அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐ.நா. பை கூட்டத்திற்கு செல்லும் போது அங்கேயே இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசுவது பற்றி பாகிஸ்தான் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிரதமர் மன்மோகன்சிங்கும் சம்மதம் தெரிவித்தார். 

ஐ.நா. சபையின் 69 வது கூட்டம் நியூயார்க்கில் வரும் 29 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிதமர் நவாஸ் ஷெரீப் நியூயார்க் சென்றடைகிறார். பிரதமர் மன்மோகன்சிங் வாஷிங்டன் நகருக்கு செல்கிறார். அப்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு அவர் நியூசிலாந்து புறப்பட்டு செல்கிறார். 

மன்மோகன்சிங்கும், நவாஸ் ஷெரீப்பும் நியூயார்க்கில் வரும் 29 ம் தேதி காலை உணவின் போது சந்தித்து பேச இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இது பற்றி அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை. அமெரிக்காவில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் இரு நாட்டு உறவுகளும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்