முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அராபுரா போட்டி - அகில் குமார் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 12 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே. 12 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அராபுரா விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டைப் பிரிவில் இந்திய முன்னணி வீரரான அகில் குமார் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. இது பற்றிய விபரம் வரு மாறு - 

இந்தியாவின் முன்னணி குத்துச் சண்டை வீரர்களில் ஒருவரான அகில் குமார், நெளரு நாட்டைச் சேர்ந்த மாகல் டிஜ்ஜை வீழ்த்தியதன் மூலம் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.  

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரில் அராபுரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வே று நாடுகள் பங்கேற்று வருகின்றன. 

அராபுரா விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முதன் முறையாக பங்கே ற்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் ஒரு காலிறுதியில் இந்திய வீரர் அகில் குமாரும், நெளரு நாட்டைச் சேர்ந்த மாகல் டிஜ்சும் பலப்பரிட்சை நடத்தினர். இதில் இந்திய வீரர் குமார் அபாரமாக சண்டையிட்டு 19 - 14 என்ற புள்ளிகள் கணக்கி ல் வெற்றி  பெற்றார். 

இந்தியாவின் சிறந்த குத்துச் சண்டை வீரர்களில் ஒருவரான அகில் குமார் காமன்வெல்த் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது நினைவு கூறத்தக்கது.  

டெல்லியில் கடந்த வருடம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. ஆனால் இதில் பதக்கம் பெற்றுத் தருவார் என்று பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட அகில் குமார் இதன் காலிறுதிச் சுற்றிலேயே தோ ல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். 

இது குமாருக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதன் பிறகு, 29 வய தான அகில் குமார் பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி ஆஸ்திரேலி யாவில் நடக்கும் அராபுரா விளையாட்டுப் போட்டியாகும். 

இந்தப் போட்டியில் குமார் பெரும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி ரவுண்டில் அவர் செய்த சில தவறுகளால் நடுவர் அவருக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டியதாயி ற்று. இதனால் அவரது புள்ளிகள் குறைந்தது. 

முன்னதாக நடந்த முதல் சுற்றில் அகில் குமார் 6 - 3 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தார். அடுத்த 3 நிமிடத்தில் அவர் 12 - 7 என்ற கணக்கிற்கு முன்னேறினார். இறுதியில், 19 - 14 என்ற கணக்கில் வெற் றி பெற்றார். 

அராபுரா விளையாட்டுப் போட்டியின் குத்துச் சண்டைப் பிரிவில் அரை இறுதிச் சுற்று இன்று நடக்க இருக்கிறது. இதன் ஒரு அரை இறுதி யில், அரியானா வீரரான அகில் குமார் ஆஸ்திரேலிய வீரர் இப்ராகிம் பல்லாவுடன் மோத இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்