முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஈரான்-அமெரிக்கா பேச்சு

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப். 26- அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே 30 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

இதில் டெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம், யுரேனியம் பங்கீடு உட்பட முக்கிய விஷயங்கள் தொடர்பாக இன்று விவாதிக்கப்படும் என தெரிகிறது. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷெரீப் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈரான் நாடு பங்கேற்றுள்ளது. அந்த கூட்டத்துக்கு இடையே ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார் என்று செய்தி வெளியானது. ஆனால் அதை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், அணுசக்தி தொடர்பான விவகாரங்களில் ஈரானுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளோம். ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் ஈரான் நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். எனினும் எல்லா பிரச்சினைக்கும் உடனடியாக தீர்வு கிடைத்து விடும் என்று கூற முடியாது என்று ரோட்ஸ் தெரிவித்தார். 

ஈரான் அணு ஆயுத பரிசோதனைகளில் ஈடுபடக்கூடும் என அமெரிக்கா எண்ணியதையடுத்து அதன் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. அணுசக்தி செயல்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்த தடை தொடரும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முன் அந்நாட்டில் அணு ஆயுதங்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்