முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லலித்மோடிக்கு கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப்.27 - லலித்மோடிக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியம்  வாழ்நாள் தடை விதித்துள்ளது. இதையடுத்து அவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியத்தில் எந்தவித பதவியையும் வகிக்க முடியாது. இவர் 2008 முதல் 2010 வரை ஐபிஎல் தலைவராக இருந்துள்ளார். 

லலித் மோடி மீது 2010-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மீறியது நிதி மோசடியில் ஈடுபட்டது என்பது உள்ளிட் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 22 குற்றச்சாட்டுகள் அடங்கிய  அறிக்கை அவருக்கு அனுப்பப்பட்டது. இதை அவர் மறுத்து வந்தார்.

 அவர் மீது 2 ஆண்டுகளாக விசரரணை நடைபெற்று வந்தது. ஆனால் அவர் எந்த விசாரணையிலும் பங்கேற்கவில்லை. பின்னர் ஒழுங்கு நடவடிக்கை குழு 134 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை பிசிசிஐயிடம் வழங்கியது. அதில் மோடி மீது 8 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.

இதையடுத்து பிபிசியின் சிறப்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவு என்று பிசிசி துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்த தீர்மானத்தை ஹரியான ா  கிரிக்கெட் சங்கத் தலைவர் அனிருத் சவுத்ரி கொண்டு வந்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்