முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.28 - கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்புமாறு அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

1990- ஆண்டு மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தபோது, சீக்கியர்களைக் கொன்று குவித்த பாதுகாப்புப் படையினருக்கு ரொக்கப் பரிசு வழங்க மன்மோகன்சிங் நிதி ஒதுக்கினார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை அவர் பாதுகாத்து வருகிறார் என்று நீதிக்கான சீக்கியர் அமைப்பு அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.  

அந்த மனு மீது மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்புமாறு அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவருக்கு நேரடியாக சம்மன் கொடுக்க அந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கும்போது பேரணி நடத்தப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.  அமெரிக்க கோர்ட்டில் 350 டாலர் பணம் கட்டினால் யாருக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யலாம். இதை பயன்படுத்தி மலிவான விளம்பர மோகத்தில் சீக்கிய அமைப்பு இந்த சம்மனை பெற்றுள்ளது என்று வழக்கறிஞர் ரவி பாத்ரா கூறினார்.            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்