முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், செப். 28 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரதமர் மன்மோகன்சிங் ஒரு வார சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமெரிக்காவிலேயே தனது பிறந்த நாளையும் எளிமையாக கொண்டாடினார் மன்மோகன்சிங். நேற்று அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். 

அப்போது விசா விதிமுறைகளில் அமெரிக்கா கொண்டு வந்த கட்டுப்பாடுகளால் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரதமர் முக்கிய பேச்சு நடத்தினார். வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு குறித்தும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ள அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். சிரியா விவகாரம், தெற்காசிய நிலவரம் குறித்தும், இலங்கையின் அத்துமீறல்கள் குறித்தும் பிரதமர் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர், 

அமெரிக்கா மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நட்பு நாடு என்று குறிப்பிட்டார். இந்தியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிகக செனட் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவில் நாளை 29 ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் ஒரு எஸ்.ஐ. உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஷெரீப்புடன் பேச்சு நடத்த கூடாது என்று பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. இதனால் ஷெரீப்பை மன்மோகன்சிங் சந்தித்து பேசுவாரா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஜம் மு காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்