முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டத்தின் முடிவை மாற்றிய தோனி சிக்ஸர்ஸ்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஞ்சி, செப். 28 - சாம்பியன்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

தோனி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 8 சிக்சர்களை விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் 18 வது ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடங்கும். சாம்பியன்ஸ்லீக் கிரிக்கெட்டின் 10 வது ஆட்டம் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல் சென்னை அணியின் இன்னிங்ஸை முரளி விஜயும், ஐதராபாத்தின் பந்து வீச்சை ஸ்டெயினும் தொடங்கினர். எந்த வகையான கிரிக்கெட் போட்டியானாலும் பந்துகளை வேகமாகவும் துல்லியமாகவும் வீசி பேட்ஸ்மேன்ஸ்களை சீர்குலைக்கும் திறன் படைத்தவர் ஸ்டெயின். 

ஆட்டத்தின் 2 வது பந்திலேயே முரளி விஜயை தனது ஸ்விங் பந்து வீச்சில் ஸ்டெயின் வெளியேறினார். இதை தொடர்ந்து ஹசியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ரெய்னா சரியான பந்துகளை தேர்வு செய்து பவுண்டர்களுக்கு அடைத்த வண்ணம் இருந்தார். 23 ரன்கள் எடுத்திருந்த போது ஹசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பத்ரிநாத் களமிறங்கினார். 

இதனிடையே 34 பந்துகளில் ரெய்னா அரை சதம் அடித்தார். 13 ரன்கள் எடுத்திருந்த போது பத்ரிநாத் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தோனி ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். சொந்த மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் 15 ஓவரில் களமிறங்கிய தோனி அடுத்த 2 ஓவர்களில் மெதுவாக ரன் சேர்த்து வந்தார். ஆனால் திசாரே பெணரா வீசிய 18 வது ஓவரில் தனது பழைய ஆட்டத்துக்கு தோனி திரும்பினார். அந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 34 ரன்கள் கிடைத்தன. இதனிடையே 84 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ஆட்டமிழந்தார். மறுபுறம் தனது அதிரடியை நிறுத்தாத தோனி கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விரட்டி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இறதி வரை ஆட்டமிழக்காத தோனி 19 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஸ்டெயின் மற்றும் டுமினி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய ஐதாராபாத் அணிக்கு பார்தீவ் படேனும், கேப்டன் தவனும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த படேல் 37 ரன்களிலும், தவன் 48 ரன்களிலும் வெளியேறி அந்த அணி சரிவுக்குள்ளானது. சிறப்பான தொடக்கத்தை  வெற்றியாக மற்ற வீரர்களால் மாற்ற முடியவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், மறுபுறம் சூறாவளியாக சுழல ஆரம்பித்தார் சமி. அவர் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது. சென்னை தரப்பில் பிராவோ மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்