முக்கிய செய்திகள்

அமெரிக்கர்கள் விலை கொடுத்தாக வேண்டும் - அல்கொய்தா

வியாழக்கிழமை, 12 மே 2011      உலகம்
flag of al-qaeda

 

கெய்ரோ,மே.13 - பின்லேடனை கொன்றதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுத்தாக வேண்டும் என்று அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அல்கொய்தாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

பின்லேடனை அமெரிக்கா கொன்று மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இதன் மூலம் மாபெரும் பாவத்தை சம்பாதித்து விட்டது. இதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுத்தாக வேண்டும். அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னை ராணுவம் காப்பாற்றும் என்று நினைக்கிறார். ஆனால் எங்களுடைய தாக்குதலில் இருந்து அவரை யாரும் காப்பாற்ற முடியாது. இதற்காக முஸ்லீம்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: