முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தின் மையமாக பாக். திகழ்கிறது: பிரதமர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன், செப். 29 - பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களின் மையமாக திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். 

நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாம் சந்தித்து பேசினாலும் அதனால் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வார அரசு முறை பயணமாக வாஷிங்டன் வந்துள்ள பிரதமர் அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுடனும் இந்தியாவுக்கு உள்ள உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களின் மையமாகவும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாகவும் செயல்பட்டு வருவதை பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லை மீது தாக்குதல் தொடுத்து வருவதையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்து கூறினேன். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்த போதிலும் சமீபத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்ளும் முறைகளும், அதன் செயல்பாடுகளும் எனக்கு சிறிது தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நவாஸ் ஷெரீப்பை சந்திக்கவிருப்பது உண்மை என்றாலும் அதனால் ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதுதான் எனது கருத்தாகும். ஆனாலும் பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தி கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இரு நாடுகளின் பூரண ஒத்துழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியா மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்து என்னிடம் விவாதித்தார். இந்த இரு நாடுகள் விஷயத்தில் சமாதான பாதைக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ள அதிபர் ஒபாமாவின் முன்முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago