முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தொழிலதிபர்களுக்கு மன்மோகன்சிங் அழைப்பு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

நியுயார்க், செப். 29 - இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் அவர் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், பாதுகாப்பு துறையில் முன்னேற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். அப்போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிரியா விவகாரம், தெற்காசிய நிலவரம் போன்ற பல பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினார்கள். பிறகு அமெரிக்க தொழிலதிபர் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அவர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்து விட்டதை ஒப்புக் கொண்ட அவர், அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே நிலைமை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் தொழில் தொடங்க வருமாறு தொழிலதிபர்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டு அழைப்பு விடுத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago