முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது: பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

நியூயார்க், செப். 30 - பயங்கரவாதத்துக்கு துணை போவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். 

பயங்கரவாதம் என்பது எல்லா இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக தொடர்கிறது. இது உலகெங்கிலும் பெரிய அளவில் அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியா வரை பயங்கரவாத அச்சுறுத்தலின் கோர முகத்தை கடந்த சில நாட்களிலேயே நாம் காண்போம். 

ஜம்முவில் கடந்த வியாழன்று நிகழ்ந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் பலியானதையும் கென்யாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.  பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லை பிரச்சினைகளுக்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். எனினும் இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு துணை போவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தங்கள் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளப்படாது என்பதையும் பாகிஸ்தான் உட்பட அனைவவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய நடவடிக்கை என்ற விவகாரத்தில் நாம் உறுதிபூண்டுள்ளதை புதுப்பித்து கொள்ள வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளுக்கு புகலிடம், பயிற்சி, நிதி, ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கும் நாடுகளை யாரும் சகித்து கொள்ளக் கூடாது. பயங்கரவாதிகளும் அரசு சாரா நபர்களும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் தொழில் நுட்பத்தை பெறுவதை நாம் தடுக்க வேண்டும். பன்னாட்டு நிதி அமைப்புகள் தங்களின் முடிவு எடுக்கும் நடைமுறைகளில் வளரும் நாடுகளின் குரலை செவிமடுக்க முன்வர வேண்டும். இந்த அமைப்புகளிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதை இந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

இப்போதைய அரசியல் யதார்த்த நிலைமையை பிரதிபலிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்து அதை மாற்றியமைக்க வேண்டும். பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளும் அதில் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஏழ்மை ஒழிப்புக்கு மிக உயர் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஏழ்மை என்பது மிகப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார சவாலாக தொடர்ந்து நீடிக்கிறது. அதை ஒழிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 2015 ம் ஆண்டுக்கு பிந்தைய வளர்ச்சி திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இது அமைய வேண்டும். அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள், நல்லாட்சி ஆகியவை முக்கியமானவை. இது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன்சிங்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago