முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, செப்.30  - சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை இந்தியகிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் என்.சீனிவாசன் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு பிசிசிஐ தலைவராக நீடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

செயலாளராக சஞ்சய் பட்டேலும், பொருளாளராக அனிருத் சௌத்ரியும், துணைத் தலைவர்களாக 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஐபிஎல் 6வது கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைதானதை தொடர்ந்து தலைவர் பதவியை என்.சீனிவாசன் தற்காலிகமாக ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிடுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடலாம் என்றும், ஆனால் அவர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவி ஏற்க  கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை அறிவித்தபடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தொடங்கியது.

இந்த கூட்டத்திற்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். ஓட்டல் வளாகத்தில் காத்திருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் அவர் நேராக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று விட்டார்.

தலைவர்  தேர்தலில் போட்டியிடு வதற்கு சீனிவாசன் மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட முன் வரவில்லை.

இந்த கூட்டத்தில் என்.சீனிவாசன் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு பிசிசிஐ தலைவராக நீடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

செயலாளராக சஞ்சய் பட்டேலும், பொருளாளராக அனிருத் சௌத்ரியும், துணைத் தலைவர்களாக 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்