முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.,க்கு எதிரான தொடரில் யுவராஜ்க்கு மீண்டும் இடம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, அக்.1 - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வரும் 10_ம் தேதி முதல் நவம்பர் மாதம் 2_ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி, 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

10_ம்தேதி 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி 13_ம் தேதி புனேயில்  தொடங்குகிறது. கடைசி மற்றும் 7_வது ஒரு நாள் போட்டி நவம்பர் 2_ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.

இதில் 20 ஓவர் போட்டி மற்றும் முதல் ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சென்னையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் யுவராஜ்சிங் மீண்டும் இடம் பிடித்தார். 9 மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் தேர்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்தார். 20 ஓவர் போட்டியிலும் திறமையை நிரூபித்தார். 

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அம்பதி ராயுடு, ஜெய்தேவ் உக்கட் இடம் பிடித்தனர். தினேஷ் கார்த்திக், ஏபுஜாரா, ரகானே, மோகித் சர்மா, பர்வேஷ் ரசூல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணியில் உள்ள 15 பேர் வருமாறு:

டோனி (கேப்டன்), வீராட்கோலி, ஷிகார்தவான், ரோகித் சர்மா, யுவராஜ்சிங், சுரேஸ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்குமார், இஷாந்த் சர்மா, வினய்குமார், அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது சமி, ஜெய்தேவ் உக்கட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago