முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லல்லுவுக்கு சிறை

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

ராஞ்சி,அக்.1 - கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடந்து வந்த கால்நடை தீவன ஊழல் வழ்க்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வர்கள், லல்லு பிரசாத் யாதவ், ஜெகனாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ்சர்மா, மற்றும் 4 அதிகாரிகள் உட்பட 45 பேர் குற்ற்வாளிகள் என ராஞ்சி  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து லல்லுபிரசாத் யாதவ் உடனடியாக கைது செய்யப்ப்ட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கான தண்டனை விபரம் 3ம் தேதி அறிவிக்கப்படும். அதன்பிறகு அவரது எம்.பி. பதவி பறி போகலாம் எனத்தெரிகிறது. 

பிகார் மாநிலத்தில் 1990 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தவர் லல்லுபிரசாத் யாதவ். இவரது ஆட்சிக்காலத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கப்பட்டதில் ரூ.900 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக குற்ற்ம் சாட்டப்பட்டது. தொகை பெரியது என்பதால் நாடு முழுவதும் இந்த ஊழல் பேசப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக லல்லு உட்பட 56 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரிக்க துவங்கியது. இதையடுத்து 1996_ல் முதல்வராக இருந்த லல்லு தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவ்ரது மனைவி ராப்ரிதேவி பிகார் மாநில முதல்வரானார். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் இருவர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறினர். அஅவரர்களில் ஒரு வர் விடுதலை செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட  7 பேர் இறந்து போனார்கள். மீதி உள்ள 45 பேர் மீது விசாரணை ந்டைபெறஅறு வந்தது. இந்த விசாரணை முடிந்த நிலையில் ராஞசி சிபிஐ நீதிமன்அறம் நேற்று தீர்ப்பளித்தது. அப்போது பிகார் முன்னாள் முதல்வர்களான லல்லுபிரசாத். ஜெகன்அனாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஸ் சர்மா மற்றும் 4 அதிகாரிகள் உட்பட 45 பேர் குற்ற்வாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 3_ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அடுத்து லல்லு பிரசாத் உடனே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து இவர் மேல்முறையீடு செய்யக்கூடும் எனத்தெரிகிறது. 

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. 

குற்ற்வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில்தான் உத்தரவிட்டது. ஆனாலும் இவர்களை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர  சட்டம் கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவர் இன்னும் கையெழுத்திடாத நிலையில் இந்த சட்டம் ஒரு முட்டாள் தனமான சட்டம் அதை கிழித்தெறிய வேண்டும் என்று சமீபத்தில் ராகுல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர சட்டம் பற்றி பிரதமரா நாடு திரும்பியதும் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த அவசர சட்டம் அமுலுக்கு வந்தால் லல்லுவின் எம்.பி. பதவி தப்பும்.இல்லாவிடில் அவரது பதவி பறிபோகும். அப்படி ஒரு நெருக்கடி லல்லுவுக்கு ஏற்பதட்டுள்ள்து. மேலும் லல்லுபிரசாத்துக்கு இந்த வழக்கில் 3 ஆண்டுகள் முதல் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தப்பி வந்த ல்ல்லு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து சிஅறையில் அடைக்கப்பட்டார். இதை யடுத்து இவரது மனைவி ராப்ரிதேவி இவரது கட்சியான ராஷ்ட்டிரிய ஜனதா தளத்திற்கு தலைவராகலாம் என தெரிகிறது. லல்லு பிரசாத் இளம் வயதிலேயே மாணவர் தலைவர் ஆனார். 1977 ல் தனது 29 வயதிலேயே இளம் எம்.பி. ஆனவர். 10 ஆண்டிலேயே மக்கள் தலைவராக உருவெடுத்த லல்லு 1990_ல் ஆட்சியை பிடித்து முதல்வரானார். பிகாரில் கிட்டத்தட்ட 15 ஆண்டுக்ள் இவரது கட்சி ஆட்சியில் இருந்தது. மத்திய ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது இவர் ரயில் க்ட்டணத்தை உயர்த்தவே இல்லை. ஊழல் வழக்கில் சிக்கிய பிறகு பதவி இழந்த இவர் தனது மனைவியை முதல்வராக்கினார். பின்னர் மக்கள் ஒதுக்கி தள்ளிய நிலையில் நிதீஸ்குமாரிடம் ஆட்சியை பறிகொடுத்தார். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்தார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ல்ல்லு ஏற்கனவே 135 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்