முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேறியது

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

காந்திநகர், அக். 3 - குஜராத்தில் லோக்ஆயுக்தா அமைப்பது தொடர்பாக மாநில கவர்னர் கம்லா பெனிவாலுக்கும், முதல்வர் மோடிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. 1986 ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தில் கவர்னர், தலைமை நீதிபதிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வந்தது. 

அதன்படி லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தில் 6 பேர் கொண்ட குழு முடிவெடுக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் கடந்த ஏப்ரல் 2 ம் தேதி குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி திருப்பி அனுப்பி விட்டார். சில விளக்கங்களையும் சில திருத்தங்களையும் மறு பரிசீலனை செய்யுமாறு அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இது மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் இந்த சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் கவர்னரின் யோசனையும் திருத்தங்களும் புறக்கணிக்கப்பட்டன. இந்த சட்டத்தை நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ. வுமான கேசுபாய் பட்டேல் எதிர்ப்பு தெரிவித்தார். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 30 ம் தேதி சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டதால் 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் லோக் ஆயுக்தா சட்டம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியதற்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? அல்லது மீண்டும் திருப்பி அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்