முக்கிய செய்திகள்

மலையாள நடிகர் ஜி.கே.பிள்ளைக்கு பிரேம் நசீர் விருது

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
G k Pillai jpg

திருவனந்தபுரம்,மே.13 - பிரபல மலையாள நடிகர் ஜி.கே.பிள்ளைக்கு மற்றொரு மிகவும் பிரபலமான மலையாள நடிகரான பிரேம் நசீர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல மலையாள நடிகரான பிரேம் நசீர், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஆந்திராவில் என்.டி. ராமராவ் போன்றவர்கள் மாதிரி புகழ்பெற்ற பழம் பெரும் நடிகராவார். பாலும் பழமும் போன்ற தமிழ் படங்களிலும் பிரேம் நசீர் நடித்துள்ளார். இவருடைய பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு சிறந்த முறையில் மலையாள திரையுலகில் சேவையாற்றிய நடிகர், நடிகைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மற்றொரு பிரபல மலையாள நடிகரான ஜி.கே.பிள்ளைக்கு வழங்கப்படும் என்று தற்போது அறக்கட்டளையின் தலைவர் ஆர். சுபாஷ், பொதுச்செயலாளர் எஸ்.வி.அனிலால் ஆகியோர் நேற்று அட்டிங்காலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். வருகின்ற 25-ம் தேதி அன்று சிராயின்கிழுவில் உள்ள ஷர்காரா மைதானத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தாமிர பட்டயம், ரூ.15 ஆயிரம் ரொக்கம், மற்றும் சிற்பி பி.டி.தாதன் வடிவமைத்த பிரேசம் நசீர் சிலை ஆகியவைகள் வழங்கப்படும். சிராயின்கிழுவில்தான் பிரேம் நசீரும், ஜி.கே.பிள்ளையும் பிறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 55 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் பணியாற்றி வரும் பிள்ளை, 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: